kerala-logo

விஜய் 69-ல் சிவராஜ் குமார்? அவரே கூறிய தகவல் என்ன?


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
விஜய்யின் கடைசி திரைப்படம் இது என்பதால்  ரசிகர்கள், பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்பில் உள்ளனர். இந்த படத்திற்கு பின் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியில் முழு நேர அரசியல்வாதியாக ஈடுபட உள்ளார். இதை அவரே அறிவித்தார்.
இந்நிலையில், விஜயின் இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் தனது பைராதி ரனகல் படத்தின் ப்ரோமேஷன் விழாவில் பேசுகையில், விஜயின் அடுத்த படத்தில் ஒரு அழகான கதாப்பாத்திரத்தில் நடிக்க கேட்டிருக்கிறார்கள்.
என்னுடைய தேதிகள் சரியாக வருமா எனப் பார்த்து கொண்டிருக்கிறேன்.  விஜயின் கடைசி படம் அது எனவே எப்படியாவது சமாளித்து நடித்துவிடுவேன் என நம்புகிறேன். விஜய் ஒரு சிறந்த நடிகர். அதுமட்டுமல்ல அவர் ஒரு நல்ல மனிதரும் கூட என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Kerala Lottery Result
Tops