க்ளாசிக் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து கவியரசர் என்று பெயரெடுத்து கண்ணதாசன் பாத காணிக்கை படத்திற்காக எழுதிய ஒரு பாடலை பார்த்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், தனது சந்தேகத்தை கவிஞரிடம் கேட்டுள்ளார். அதற்கு கவிஞர் கொடுத்த விளக்கம் என்ன என்பதை பார்ப்போம்.
1962-ம் ஆண்டு இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் வெளியான படம் பாத காணிக்கை. ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு, கமல்ஹாசன், அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர். படத்திற்கு அனைத்து பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார். ‘படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
படத்தில் பாடல்கள் அனைத்தும் கொண்டாடும் வகையில் அமைந்திருந்த நிலையில், வீடு வரை உறவு என்ற பாடல் ரசிகர்கள் கொண்டாடிய பாடலாக இருக்கிறது. அதேபோல் துக்க வீடுகளில் இந்த பாடல் ஒலிக்காமல் இருக்காது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சோகத்தின் உச்சத்தில் இருந்து எழுதப்பட்ட இந்த பாடலின் வரிகளை பார்த்த பாடகர் டி.எம்.சௌந்திரராஜன், தனது சந்தேகத்தை கவிஞரிடம் கேட்டுள்ளார்.
படத்தின் கம்போசிங் நடைபெறும்போது, ஒரு கடத்தில் படத்திற்கு கனமான ஒரு தத்துவ பாடல் தேவைப்படுகிறது. படத்தில், தாய் மாமனின் பேச்சை கேட்டு, அசோகன் தனது தந்தையிடம் சண்டைபோட அவர் ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார். அதன்பிறகு வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ளும் அசோகன் பாடுவது போன்ற ஒரு தத்துவ பாடலை கண்ணதாசன் எழுத தொடங்குகிறார். இடையில் தனது நெருங்கிய நண்பரின் மரணத்தில் நடந்ததை நினைத்து அந்த பாடலை எழுதுகிறார்.
அதேபோல் மரணம் தொடர்பாக பட்டினத்தார் எழுதிய ஒரு பாடலை எளிமையாக தமிழ்ப்படுத்தி கண்ணதாசன் எழுதியிருப்பார். இந்த பாடலை பாட வந்த டி.எம்.எஸ். பாடல் சிறப்பாக இருக்கிறது. ஆனால் எங்கேயே கேட்டிருக்கிறேன் என்று சொல்ல கண்ணதாசன் பட்டினத்தார் பாடல் என்று சொல்கிறார். அப்போது பட்டினத்தார் தனது பாடலில், கடைசி வரை செய்த பாவமும் புன்னியமும் தான் கூட வரும் என்று எழுதியிருப்பார். ஆனால், நீங்கள் கடைசி வரை யாரோ என்று எழுதி இருக்கீங்க ஏன் என்று கேட்க்கிறார்.
இதை கேட்ட கண்ணதாசன், கடைசி வரை பாவமும் முன்னியமும் தான் வரும் என்று சொல்ல, பட்டினத்தார் போல் ஒரு ஞானி தான் வேண்டும். ஆனால் நான் ஞானி அல்ல. சாதாரண மனிதன் அதனால் தான் கேள்விக்குறியுடன் முடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.