kerala-logo

𝑻𝒉𝒆 𝑺𝒉𝒂𝒘𝒔𝒂𝒏𝒌 𝑹𝒆𝒅𝒆𝒎𝒑𝒕𝒊𝒐𝒏: நம்பிக்கையின் நீரூற்று ”தி ஷாஷங்க் ரிடெம்சன்”- வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய படம்!


ஐ.எம்.டி.பி-யில் 9.3 ரேட்டிங் உடன் பல வருடங்களாக முதலிடத்தில் இருக்கும் படம் The Shawshank Redemption. இதுவரை உலகம் முழுவதும் வெளியான படங்களில் அதிக முறை பார்க்கப்பட்ட படமும் இதுவே. படம் வெளியான ஆண்டு 1994. நம்பிக்கையை அளவற்ற வகையில் அள்ளிக்கொடுத்த ஒரு அற்புதமான கலைச் சித்திரமான இப்படம் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

படத்தின் கதை:
தனது மனைவி மற்றும் மனைவியின் காதலன் இருவரையும் கொன்றதாக வங்கி ஊழியரான ஆன்டி டுஃப்ரேனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் ஷஷாங்க் சிறைக்குக் கொண்டுவரப்படுகிறார். சிறையில் உயரதிகாரிகள் வாங்கின கருப்பு பணத்தை எப்படி கணக்குல காட்டணும்னு ஹீரோ அவர்களுக்கு உதவி செய்வான்.
சிறையில் அனைவரையும் படிக்க வைக்கிறான். அங்க இருக்குற நூலகத்தை புத்தம் புதியதாக மாத்துறான். இந்த வேளையில், சிறையில் மற்றொரு இளைஞர் குற்றவாளியாக வருகிறான். அவனை ஹீரோ நல்லா படிக்க வைக்குறான்.

ஒருநாள் அந்த பையன் , ஹீரோவோட  மனைவியை கொலை செய்த உண்மை குற்றவாளி யாருன்னு தெரியும்னு சொல்றான். அந்த கைதியே இந்த இளைஞனிடம் வேறொரு ஜெயிலில் சொல்லியிருப்பான். நான்தான் கொலை பண்ணேன். ஆனால் வேற ஒருத்தன கைது பண்ணி சிறையிலடைத்து விட்டார்கள் என்று. இதுக்குமேல ஹீரோ என்ன முடிவு எடுக்குறான். எப்படி அவன் வாழ்க்கை திசைதிரும்புது என்பதுதான் மீதி கதை..
1994-ல் வெளிவந்த இந்த படமானது ஸ்டீபன் கிங் எழுதிய சிறுகதையான ரீட்டா ஹேவொர்த் மற்றும் ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் Rita Hayworth and Shawshank Redemption-ஐ அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. TimRobbins மற்றும் Morgan Freeman முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘The Green Mile’ & ‘The Mist’ போன்ற படங்களின் இயக்குனரான “Frank Darabont” இப்படத்தை இயக்கியிருந்தார்.

முக்கிய கதாபாத்திரங்கள் – ப்ரூக்ஸ்:
பல வருடங்கள் சிறையில் இருந்து வெளியே வந்த முதியவரான ப்ரூக்ஸ்-க்கு ஒரு கடையில் வேலை கிடைக்கும். ஆனால், தனிமை அவரை ஆட்கொண்டுவிடும். பேசுவதற்கு கூட அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள்.

சிறையில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் தற்போது தனிமை சிறையில் மாட்டிக் கொண்டார். முதுமையின் தனிமை எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது என உணர்ந்து, திடீரென ஒருநாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வார்.
எல்லிஸ் – நண்பன் ஊக்கத்தால் தன்னம்பிக்கை
கிட்டத்தட்ட ஷாஷாங்க் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் கழித்தவர் எல்லிஸ் பாய்ட் . ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை பரோல் வழங்குவதற்காக விசாரணை நடக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் எல்லிஸ் பாய்ட்க்கு பரோல் மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

ஒரு வழியாக 40-வது ஆண்டில் அவருக்கு பரோல் கொடுத்து விடுவார்கள். அப்போது அவர் 60 வயதினை கடந்திருப்பார். வாழ வேண்டிய வாழ்க்கையில் முக்கியமான வயது எல்லாம் கடந்து போயிருக்கும்.
எல்லிஸ்க்கும் பரூக்ஸ் போலவே ஒரு வேலையும், தங்குவதற்கு இடமும் கிடைக்கும். அவரும் வேலை செய்து கொண்டே இருப்பார். தனி அறை.. யாருமில்லா தனிமை. தற்கொலை எண்ணங்கள் அவரையும் ஆட்கொண்டுவிடும்.
இந்த இடத்தில்தான் அவர் தற்கொலை முடிவை கைவிட்டு வேறொரு முடிவை எடுப்பார். எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தழைத்தோங்கும். அதற்கு முக்கிய காரணம்தான் படத்தின் மைய கதாபாத்திரமான ஆண்டி Andy. அவன் கொடுத்த பொன்னான வார்த்தைகள்தான் எல்லிஸை தற்கொலை முடிவில் இருந்து வெளியேற்றும்.
ஆண்டி – நம்பிக்கையின் ஊற்று:
Andy கதாபாத்திரத்தை இயக்குனர் செதுக்கி இருப்பார். வாழ்க்கை நம்மை இருளில் தள்ளும்போது, அடுத்து கண்களுக்கு எட்டியவரை எந்த வழியுமே தெரியாத அந்த தருணத்தில் எப்படி வாழ்க்கையை வெளிச்சத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும் என்பதை பளீச்சென்று ஆண்ட்ரூ கதாபாத்திரம் கற்றுக் கொடுத்துவிட்டுச் செல்லும்.

Andy தனிப்பட்ட தன்னுடைய விடுதலையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட மாட்டான். சிறையில் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கையின் கீற்றை பாய்ச்சிக் கொண்டே இருப்பான். நூலகத்தை உருவாக்கி அவர்களது வாழ்க்கையை மாற்றுவான். எல்லோரையும் படிக்க வைக்க முயற்சிப்பான்.
தனக்கு கிடைக்கும் சலுகைகளை எல்லோருக்கும் பயன்படும்படி செய்துகொண்டே இருப்பான். சிறையில் இருந்து தப்பிப்பதற்கான தருணம் வரும் வரை அந்த சிறையில் மிகப்பெரிய காரியங்களை சாதித்து இருப்பான். ஆனால், இதெல்லாம் ஒருநாளில், ஒரு முயற்சியில் செய்துவிடவில்லை. அவ்வளவு நம்பிக்கையான, எல்லோருடைய சந்தோஷத்தையும் மனதில் வைத்திருக்கும் கதாபாத்திரம்தான் Andy.

சிறைவாசம் இருப்பவர்களின் மனநிலை:
பல வருடங்களாக சிறையில் இருக்கும் வெவ்வேறு மனிதர்களின் மனநிலையை பிரதிபலித்த படம் இப்படம்போல் வேறு எந்த படமும் இல்லை. ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் ஆட்கள் செல்ல செல்ல சிறையில் இருந்து வெளிவர மனது வராது என்பதை குறிக்கும் கேரக்டர்கள், எப்படா வெளிய வருவோம் என்று நினைக்கும் கேரக்டர்கள், சரி வந்து விட்டோம் என்று அதையே நினைக்காமல் இங்கு எவ்வாறு முன்னேறலாம் என நினைக்கும் கேரக்டர்கள் என படம் முழுதும் வெவ்வேறு உணர்வு பிரதிபலிப்புகள். அதுவும் சிறைவாசிகள் ஒரு இசைக்காக எவ்வளவு ஏங்கி இருப்பார்கள் என்று காட்சிப்படுத்தப்பட்ட இடம் எதுவும் சிறப்பு..

What a Climax.!
படத்தின் இறுதி காட்சிகளுக்கு சில காட்சிகளுக்கு முன்பு வரை சாதாரணமான படமாக தோன்றிக் கொண்டிருந்த நமக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பார் இயக்குநர். மெதுவாக சென்று கொண்டிருக்கும் படத்தின் உயிர்நாடியே படத்தின் கடைசி 15 நிமிடங்கள் . அந்த feeling தனி.

வாழ்வில் வரும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டி அந்த நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினையாக சில கலைப் படைப்புகள் இருக்கும்.! இப்படம் அந்த Category.!
வாழ்க்கையில் நெருக்கடியான நேரங்களில் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒன்றினை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்லிட்டு செல்கிறது இந்தப் படம். அதனால்தான், ‘The Godfather’ படத்தை பின்னுக்குத் தள்ளி இன்று வரை தலைசிறந்த உலக சினிமாக்களில் ஒன்றாக ‘The Shawshank Redemption’ கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்கன் ஃப்ரீமேனின் பார்வையில்தான் மொத்தப் படமும் நமக்குச் சொல்லப்படுகிறது. படத்தின் ஒவ்வொரு வசனமும் இன்றளவும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பவை. அதிலும் க்ளைமாக்ஸுக்கு முன்பான காட்சியில் ரெட்டிடம் ஆன்டி பேசும் வசனங்கள் காலத்தால் அழியாதவை. அதுவும் MS பாஸ்கரின் டப்பிங் Morgan freemanன் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு பொருத்தம்..
படத்தின் இறுதியில் ஆண்டி சிறையிலிருந்து தப்பிக்கும்போது நாம்விடும் நிம்மதிப் பெருமூச்சே இப்படத்தின் வெற்றி…!

𝑻𝒉𝒆 𝑺𝒉𝒂𝒘𝒔𝒂𝒏𝒌 𝑹𝒆𝒅𝒆𝒎𝒑𝒕𝒊𝒐𝒏 உலக சினிமாவின் மைல்கல்..!

Kerala Lottery Result
Tops