kerala-logo

[1] சின்னத்திரையில் நடிக்க ஆசையா? பெண்களுக்கான அரிய வாய்ப்பு: ஜீ தமிழ் நியூ அப்டேட்


[2] மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் பிரபலமாக ஆசையா? ஜீ தமிழில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்பு – சூப்பர் அப்டேட் இதோ!

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருக்கும் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. சேனலும் தொடர்ந்து புதுப்புது சீரியல்களையும் ரியாலிட்டி ஷோக்களையும் கொண்டு வருகிறது.

அடுத்து குழந்தைகளுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது, அதுமட்டுமின்றி மகாநடிகை என்ற புதிய நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது. நாயகியாக வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கும் பெண்களின் கனவை நனவாக்கும் மேடையாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது. இதற்கான ஆடிஷன் திருவண்ணாமலையில் தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மகாநடிகை ஆடிஷன்ஸ் சேலத்திலும் சரிகம லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிஷன்ஸ் சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் நடை பெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

மகாநடிகை ஆடிசன்ஸ்:

இடம்: சேலம்

நாள்: 22.08.2024 வியாழன் கிழமை நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம்.

இந்த ஆடிஷனில் 18 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். தேர்வாகும் போட்டியாளர்களுக்கு நடிப்பு திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான பல ரவுண்டிகளின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சரிகமபா லிட்டில் சேம்ஸ் சீசன் 4 ஆடிசன்ஸ்:

கிருஷ்ணகிரி.

Join Get ₹99!

.

நாள்: 20.08.2024, செவ்வாய் கிழமை நடைபெறும் இடம்: தேன் தமிழ் நாட்டியாலயா,No. 1/149, முதல் தளம், ஹைடெர் Complex , ராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி.

தருமபுரி,

நாள்: 21.08.2024 புதன் கிழமை நடைபெறும் இடம்: ஸ்ரீ லட்சுமி சிவசக்தி டான்ஸ் அகாடமி சேலம் நெடுஞ்சாலை, நேதாஜி பைபாஸ் சாலை, அரசு மருத்துவமனை அருகில், இரயில் நிலையம் சாலை, அலெக்ஸ் ஆர்தோ கேர் 2வது மாடி, தருமபுரி,

சேலம்.

நாள்: 22.08.2024 வியாழன் கிழமை நடைபெறும் இடம்: ஆராதனா இசைப்பள்ளி, 10/315, காளியாபிள்ளை தோப்பு, இரண்டாவது குறுக்குத் தெரு, எஸ். கே. எஸ், ஆஸ்பிடல் ரோடு, பேர்லண்ட்ஸ், சேலம்.

இந்த சீசனுக்கான ஆடிஷனில் 6 முதல் பதினான்கு வயதிற்கு உட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம் என ஜீ தமிழ் தொலைக்காட்ச்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சாமானியனையும் சாதனையாளராக மாற்றும் இந்த பொன்னான வாய்ப்பை ஆர்வமும், திறமையும் உள்ளவர்கள் பயன்படுத்திக்கொண்டு முன்னேறும் நோக்கில் ஜீ தமிழ் இந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகள் உதனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“