kerala-logo

2.0 வசூலை மிஞ்சும் மகாராஜா; சீனாவில் இவ்வளவு வசூலா?


குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.
இதில் அனுராக் கஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி என பலர் நடித்திருந்தனர்.
பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் ரூ. 150 கோடி வரை வசூல் செய்திருந்தது.
இந்த படம் சீன மொழியில் டப் செய்து சமீபத்தில் சீனாவில் வெளியிடப்பட்டதி. இந்நிலையில் சீனாவில் செய்த வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவிலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் இதுவரை ரூ. 20 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியின் 2.0 படம் அங்கு ரூ. 33 கோடி வரை வசூலித்திருந்ததாம். இந்நிலையில் விஜய் சேதுபதியின் மகாராஜா படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் கண்டிப்பாக 2.0 பட வசூலை முறியடிக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Kerala Lottery Result
Tops