kerala-logo

3 கேரக்டர்கள் நியூ என்ட்ரி: முக்கியத்துவம் யாருக்கு? அண்ணா சீரியல் அப்டேட்!


கார்த்தியால் அம்மாவை சந்தித்த ராஜராஜன்.. மகிழ்ச்சியில் துள்ளும் மாயாவுக்கு காத்திருக்கும் செக்மேட் – கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் ராஜராஜனுக்கு கார்த்திக் தன்னுடைய தங்கையின் மகன் என்று தெரிய வந்த நிலையில் இன்று, மாயா வீட்டில் மாயாவும் மகேஷும் திட்டமிட்டபடியே அந்த ட்ரைவரை ஊரை விட்டு துரதியாச்சு என்று நினைத்து சந்தோசப்படுகின்றனர். மறுபக்கம் கார்த்தியை சந்தித்த ராஜராஜன் என் தங்கச்சி பையனா நீ என்று மிகுந்த சந்தோசப்படுகிறார்.
நானே உன்னை ஊரை விட்டு போக சொல்ற மாதிரி பண்ணிட்டேனே என்று வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறார். அடுத்ததாக கார்த்திக் ராஜராஜனையும் பாட்டி பரமேஸ்வரியையும் சந்திக்க வைக்கிறான். 25 வருடங்களுக்கு பிறகு அம்மாவை சந்தித்த ராஜராஜன் அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண் கலங்குகிறார். பரமேஸ்வரி பாட்டி பெத்த புள்ளையை பார்த்துட்டேன் என்று சந்தோசப்படுகிறாள்.
அதனை தொடர்ந்து ராஜராஜன் கார்த்தியிடம் நான் தானே நீ ஊரை விட்டு போக காரணமாகிட்டேன். பஞ்சாயத்தில் வைத்து நான் பொய் சொல்லிட்டேன் என்று சொல்லி உன்னை வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் கார்த்திக் வேண்டாம் மாமா என்று ராஜராஜனை தடுத்து நிறுத்துகிறான், மேலும் ஊருக்குள் மீண்டும் வர வேற வழி இருக்கு என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சௌந்தரபாண்டியை கடுப்பாக்கிய சிவபாலன்.. நியூ என்ட்ரி கொடுக்கும் 3 பிரபலங்கள் – அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சௌந்தரபாண்டி வரவைத்து இருந்த பெண் வீட்டார் சிவபாலனை வீட்டோட மாப்பிள்ளையாக கேட்ட நிலையில் இன்று, சிவபாலன் எனக்கு ஓகே தான் பா.. நான் வீட்டோட மாப்பிள்ளையாக போயிடுறேன். நீங்க மட்டும் தனியா சந்தோசமா இருங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி இனிமே யாராவது வீட்டோட மாப்பிள்ளையாக கேட்டு வந்தீங்க அவ்வளவு தான் என சத்தம் போடுகிறார்.
இதை தொடர்ந்து திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்டு அமெரிக்காவில் செட்டிலான ஒரு குடும்பம் கோவிலில் பரிகாரம் செய்வதற்காக திருச்செந்தூர் வருகின்றனர். அப்போது கணவனும் மனைவியும் கோவில் குளத்தில் தலை மூழ்கி வருவதற்காக செல்கின்றனர், தங்களது குழந்தையை மட்டும் காரில் உட்கார வைத்து விட்டு ட்ரைவரை பார்த்து கொள்ள செல்கின்றனர். திடீரென குழந்தைக்கு பிக்ஸ் வர ட்ரைவர் பதறி போய் குளத்தருகே செல்கிறார்.
அங்கு யாரும் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி குழந்தையை பரணியின் கிளினிக்கிற்கு அழைத்து செல்கிறார். குழந்தையை பரிசோதனை செய்த பரணி உடனே மதுரைக்கு அழைத்து செல்ல வேண்டும் என மதுரைக்கு கிளம்புகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எழுந்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து திருச்செந்தூர் வரும் பிரபலங்களாக தெய்வம் தந்த பூவே ஸ்ரீநிதி மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜமீலா என்ற சீரியலில் நாயகனாக நடித்த அஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர். மேலும் குழந்தை நட்சத்திரமாக நினைத்தேன் வந்தாய் சீரியல் அஞ்சலி பாப்பா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops