வீட்டில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் விலை 20 சதவீதம் உயர்ந்துள்ளது மற்றும் அசைவ சாப்பாட்டின் விலை, தொடர்ந்து 12 மாதங்களாக குறைந்து வந்த நிலையில், அக்டோபரில் 5 சதவீதம் உயர்ந்துள்ளதாக தர நிர்ணய நிறுவனமான கிரிசில் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Veg thali prices spurt 20% in October
காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக சைவ சாப்பாட்டின் விலை உயர்ந்துள்ளது, காய்கறிகள் சைவ சாப்பாட்டின் விலையில் 40 சதவீத பங்குகளை வகிக்கின்றன. குறிப்பாக செப்டம்பரில் இடைவிடாத மழை காரணமாக வரத்து குறைந்ததால் அக்டோபரில், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு விலைகள் முறையே 46 சதவீதம் மற்றும் 51 சதவீதம் உயர்ந்தன என கிரிசில் தெரிவித்துள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மழைப்பொழிவு காரணமாக வெங்காய அறுவடை தாமதமானது மற்றும் ராபி பருவ உருளைக்கிழங்கின் குளிர் சேமிப்பு இருப்புக்கள் (வருடாந்திர உருளைக்கிழங்கு உற்பத்தியில் 95 சதவிகிதம்) சீசன் முடிவின் காரணமாக குறைந்து வருகின்றன, அதே நேரத்தில் புதிய வரத்து டிசம்பர்-ஜனவரி முதல் தொடங்கும் என கிரிசில் தெரிவித்துள்ளது.
பயிர் சேதம் மற்றும் பண்டிகை தேவை காரணமாக மஹாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வருகையை பாதித்த செப்டம்பர் மழையின் காரணமாக அக்டோபர் 2023ல் தக்காளியின் விலை கிலோ ரூ.29-ல் இருந்து 2024 அக்டோபரில் ரூ.64 ஆக இருமடங்காக உயர்ந்துள்ளது.
இருப்பினும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வருவதால், நவம்பர் மாதத்தில் விலை சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சைவ சாப்பாட்டின் விலையில் 9 சதவீதத்தைக் கொண்டுள்ள பருப்பு வகைகளின் விலை, 11 சதவீதம் என குறைந்த அளவில் தொடக்க இருப்பு இருந்ததால், குறைந்த கையிருப்பு விநியோகம் மற்றும் பண்டிகைக் கால தேவை காரணமாக 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
புதிய வரத்து தொடங்கியவுடன் டிசம்பர் முதல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் டெல்லியில் 14.2 கிலோ எடை கொண்ட எல்.பி.ஜி சிலிண்டருக்கு ரூ.903 ஆக இருந்த எரிபொருள் விலையில் 11 சதவீதம் சரிவு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.803 ஆக குறைந்தது, சாப்பாடு விலை மேலும் அதிகரிப்பதைத் தடுத்தது.
அசைவ சாப்பாட்டுக்கு, கறிக்கோழி விலையில் ஆண்டுக்கு 9 சதவீதம் சரிவு, இது அசைவ சாப்பாட்டின் செலவில் 50 சதவிகிதமாக உள்ளதால் ஒப்பீட்டளவில் மெதுவான உயர்வுக்கு வழிவகுத்தது, அதே நேரத்தில் கிட்டத்தட்ட செலவினத்தில் 22 சதவிகிதத்தைக் கொண்டுள்ள காய்கறிகளின் விலை உயர்வால் செலவினம் அதிகரித்துள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.
“அக்டோபர் மாதத்தில், சைவ மற்றும் அசைவ சாப்பாடுகளின் விலை முறையே 6 சதவீதம் மற்றும் 4 சதவீதம் உயர்ந்துள்ளது. தக்காளி விளையும் பகுதிகளில் அதிக மழைப்பொழிவு காரணமாக, அக்டோபர் மாதத்தில் தக்காளி விலை 39 சதவீதம் உயர்ந்து கிலோ ரூ. 64 ஆக இருந்தது, இது சந்தை வருகையை பாதித்தது,” என்று கிரிசில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இடைவிடாத மழை பெய்து, பயிர்களை சேதப்படுத்தியதாலும், காரீஃப் அறுவடை 10-15 நாட்கள் தாமதமானதாலும் வெங்காயத்தின் விலை அக்டோபரில் 6 சதவீதம் உயர்ந்துள்ளது.
இறக்குமதி வரி அதிகரிப்பு மற்றும் ஆரோக்கியமான பண்டிகை தேவை காரணமாக அக்டோபர் மாதத்தில் காய்கறி எண்ணெய் விலை 10 சதவீதம் உயர்ந்தது. மாதந்தோறும் நிலையான கறிக்கோழி விலைகள் அசைவ சாப்பாடு விலை மேலும் உயர்வதைத் தடுக்க உதவியது.
