kerala-logo

திடீரென்று வேலையை காட்டிய தங்கம் விலை: சவரனுக்கு ரூ. 480 அதிகரித்துள்ளது!


இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது.
அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இதன் எதிரொலியாக தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைந்தது.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று ஏற்றம் கண்டது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று மீண்டும் அதிரடியாக அதிகரித்து இருப்பது நகைப்பிரியர்களுக்கும் இல்லத்தரசில்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 480 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 55,960 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 60 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.6,995 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,631-க்கும், ஒரு சவரன் ரூ. 61,048 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. கிராமுக்கு ரூ. 99 க்கும், கிலோ ரூ. 99,000 க்கும் விற்பனையாகிறது.

Kerala Lottery Result
Tops