இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.
குறிப்பாக இந்தாண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் காரணமாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டது.
கிட்டதிட்ட சவரன் ரூ.60,000-ஐ நெருங்கியது. இந்நிலையில் கடந்த 4,5 நாட்களாக விலை சற்று குறைந்து வருகிறது. அதாவது ரூ.57,000 அளவிற்கு வந்துள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் (டிச.2) தங்கம் சவரனுக்கு ரூ.480 குறைந்தது. ஆனால் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்திருந்தது.
இந்தநிலையில் இன்று (டிச.4) எவ்வித விலை மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ரூ.57,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7,130-க்கு விற்பனையாகிறது.