kerala-logo

பிரதமர் வீட்டு வசதி திட்டம்: இவர்கள் எல்லாம் பயன்பெற இயலாது : புதிய நிபந்தனைகள் வெளியீடு


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதாகும். இந்த ஆண்டோடு பி.எம் ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால், மத்திய அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டத்தை நீட்டித்துள்ளது.இந்த நிலையில், பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் புதிய நிபந்தனைகள்:
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயன்பெற புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெற இயலாது என்பதை கீழே தரப்பட்டுள்ளது.
*3 சக்கரம் அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், டிராக்டர் போன்ற வேளாண் கருவிகள் வைத்திருப்போர் வீடு பெற தகுதியற்றவர்கள்.
*ரூ.50,000-க்கு மேல் கடன் பெற தகுதி உள்ள கிஷான் கடன் அட்டை வைத்திருப்போர், அரசு ஊழியர் குடும்பத்தினர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது.
*வேளாண் சாராத தொழில் நிறுவனங்கள் நடத்துவோர், மாதம் ரூ.15,000-க்கு மேல் ஊதியம் பெறும் பணியில் உள்ளவர்களும் திட்டத்தில் பயன்பெற இயலாது.
*வருமானவரி, தொழில் வரி செலுத்துபவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
*பாசன வசதியுள்ள 2.5 ஏக்கர், பாசன வதி இல்லாத 5 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.
*செங்கல் சுவர்கள், கான்கிரீட் கூரை மற்றும் இரு அறைகள் கொண்ட வீட்டில் குடியிருப்போரும் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தில் வீடு பெற முடியாது.

Kerala Lottery Result
Tops