காய்கறி சந்தைகளில் கடந்த சில மாதங்களாக முருங்கைக்காய் நல்ல விலைக்கு போகாமல் இருந்தது. ஆனால் தற்போது இதன் விலை அதிகரித்துள்ளது.
ஆனால் இன்றைய விலை நிலவரப்படி முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது. அதன்படி ஒரே ஒரு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ முருங்கைக்காய் ரு300க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை ரூ. 400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் ஒரே ஒரு முருங்கைக்காய் 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் முருங்கை வரத்து வெகுவாக குறைந்துள்ளது. முருங்கை பிஞ்சுகள் கீழே உதிர்ந்து விழுவதால் முருங்கை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் காய்கறி சந்தைகளுக்கான முருங்கைக்காய் வரத்து குறைந்து வருகிறது. இதனால் கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று ஒரு முருங்கைக்காய் விலை ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனை செய்யப்பட்டது. 1 கிலோ முருங்கைக்காய் ரூ. 400 வரை விற்பனையானது. கடந்த சில நாட்களாக ரூ. 250 முதல் ரூ. 350 வரை விற்பனையான ஒரு கிலோ முருங்கைக்காய் இன்று ஒரேயடியாக ரூ400 -க்கு விற்பனையாகிறது.