இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது.
அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை கடந்த மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த சூழலில், கடந்த ஜூலை மாதம் 2024-2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) 15%-லிருந்து 6 % ஆக குறைப்பு என்றும், பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.4% குறைக்கப்படுகிறது என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி வரும் சூழலில், இன்று சற்று குறைந்திருப்பது நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 57,200 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 7,800 -க்கும், ஒரு சவரன் ரூ. 62,400 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ. 100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ, 1,00,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.