kerala-logo

போஸ்ட் ஆபீஸ் இன்சூரன்ஸ்: வருடத்திற்கு ரூ. 799 கட்டினால் 15 லட்சம் கிடைக்கும்!


விபத்தினால் ஏற்படும் இழப்பீடை சீர் செய்வதற்காக போஸ்ட் ஆஃபீஸில் இந்தக் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீடு திட்டம் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸுடன் இணைந்து வழங்கப்படுகிறது.
குறைந்த அளவிலான பிரீமியமில் அதிகப்படியான லாபம் பெறக்கூடிய திட்டமாக இது கருதப்படுகிறது. இந்த திட்டத்தை எடுத்துக் கொள்வதற்கு போஸ்ட் ஆஃபீஸில் சேமிப்பு கணக்கு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், 18 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் இந்த திட்டத்தை தொடங்க முடியும்.
இந்த காப்பீடு எடுத்துக் கொண்டவர்கள் விபத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்படும். மேலும், விபத்தில் இரண்டு கை மற்றும் கால்களையும் இழந்து விட்டாலும் காப்பீட்டு தொகை வழங்கப்படும். இதேபோல், ஒரு கை மற்றும் காலை இழந்தவர்களுக்கும் ரூ. 15 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.
விபத்து ஏற்பட்டால் ஆம்புலன்ஸ் கட்டணமாக ரூ. 11,000, ஒரு உறவினரின் பயண செலவாக ரூ. 11,000, வாகன கட்டணமாக ரூ. 11,000, இரத்தம் வாங்குவதற்கு ரூ. 11,000, இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு ரூ. 14,000, விபத்தில் உயிரிழந்து விட்டால் அவர்களின் இறுதிச் சடங்கிற்கு ரூ. 14,000  உள்ளிட்டவை இந்த காப்பீட்டு திட்டத்தில் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொடங்கிய பின்னர் ஆண்டு தோறும் ரூ. 799 செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.

Kerala Lottery Result
Tops