kerala-logo

ஹூண்டாய் தொடர்ந்து மாருதியும் அறிவிப்பு; ஜன.1 முதல் கார்களின் விலை அதிரடி உயர்வு


ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து மாருதி சுசுகி நிறுவனமும் ஜனவரி 1 முதல் தங்கள் கார்களின் விலையை இந்தியாவில் உயர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் முன்னணி கார் நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஜனவரி 1 முதல் தாங்கள் உற்பத்தி செய்யப்படும்  அனைத்து ரக கார்களின் விலையும் உயர்த்தப் போவதாக கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டது.
கார்களுக்கான உற்பத்தி செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு செய்யப்படுவதாக கூறியது. அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை காரின் விலை உயரும் என ஹூண்டாய் மோட்டார் அறிவித்தது.
இந்த நிலையில் மாருதி சுசுகி நிறுவனமும் தங்கள் கார்களின் விலையை உயர்த்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்த ஆவணத்தில் நிறுவனம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாடல்களை பொறுத்து கார்களின் விலை உயர்வு மாறுபடும் எனக் கூறியுள்ளது. இந்த விலை உயர்வானது 4 சதவீதம் வரை இருக்கும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜன.1 முதல் மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி உள்ளிட்ட உயர் ரக கார்கள் விலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kerala Lottery Result
Tops