சண்டிகரில் வசிக்கும் நபர் ஒருவர் ரூ.11 லட்சம் மதிப்புள்ள 37 வருட பழமையான ரிலையன்ஸ் பங்கு ஆவணங்களைக் கண்டுபிடித்தார், இது சமூக வலைதளங்களில் நகைச்சுவையான எதிர்வினைகளைத் தூண்டியது.
சண்டிகரைச் சேர்ந்த கார் ஆர்வலரான ரத்தன் தில்லன், அண்மையில் தனது வீட்டை சுத்தம் செய்தபோது ரிலையன்ஸ் பங்கு தொடர்பான ஆவணங்கள் கிடைத்தன. 1988-ல் வாங்கப்பட்ட அந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) பங்குகளின் ஆவணங்களின்படி, தற்போது அதன் அசல் பங்குதாரர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த கால கட்டத்தில் தலா ரூ.10 என்ற விலையில் 30 பங்குகளை வாங்கியிருந்தார். பங்குச் சந்தையைப் பற்றி அறிமுகமில்லாத அந்த நபர், அதனை புகைப் படன்கள் எடுத்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டு தன்னை பின்தொடர்பவர்களிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டார்.
We found these at home, but I have no idea about the stock market. Can someone with expertise guide us on whether we still own these shares?😅@reliancegroup pic.twitter.com/KO8EKpbjD3
— Rattan Dhillon (@ShivrattanDhil1) March 11, 2025
பங்கின் தற்போதைய மதிப்பு குறித்த தங்கள் மதிப்பீடுகளுடன் பலர் பதிலளித்தனர். 3 பங்குப் பிரிப்புகள் மற்றும் 2 போனஸ்களுக்குப் பிறகு, ஹோல்டிங் 960 பங்குகளாக வளர்ந்துள்ளதாகவும், மதிப்பிடப்பட்ட மதிப்பு ரூ.11 முதல் 12 லட்சம் வரை இருப்பதாகவும் ஒருவர் கணக்கிட்டார்.
ரமேஷ் என்ற பயனர் பங்குகளின் மதிப்பை துல்லியமாகக் கணக்கிட்டு எழுதினார், மொத்த ஆரம்ப பங்குகள் = 30. 3 பிரிப்புகள் மற்றும் 2 போனஸ்களுக்குப் பிறகு, இன்று 960 பங்குகள் இருக்க வேண்டும். இன்றைய மதிப்பு தோராயமாக ரூ. 11.88 லட்சம் என்றார்.
சரிபார்ப்புக்காக நீங்கள் இவற்றை அலுவலக சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும், பின்னர் அவர்கள் இந்தப் பங்குகளை உங்கள் டிமேட் டிஜிட்டல் முறையில் வரவு வைப்பார்கள் என்றார்.