kerala-logo

Gold Rate Today: வார தொடக்கத்தில் வந்த நல்ல செய்தி… இல்லத்தரசிகள் ஹேப்பி: இன்றைய தங்கம் ரேட் பாருங்க!


இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், உலகில் நிலவும் போர் பதற்றம் தங்கம் விலை மீதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்து இருந்தாலும், நாளுக்கு நாள் தங்கம் விலை அதிரடியாக அதிகரித்தும், சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில்,  தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் பெரும்பாலும் குறைந்தே விற்பனையானது. வார தொடக்கத்தில் ரூ.57,120-க்கு விற்பனையான சவரன் விலை வார இறுதியில் ரூ.56,800-க்கு விற்பனையானது. பெரிய அளவில் விலை உயர்வு இல்லாததால் தங்கம் வாங்குவோர் சற்று நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.7,100-க்கும் சவரன் ரூ. 56,800-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 99 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
22-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
21-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,800
20-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,320
19-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,560
18-12-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
22-12-2024- ஒரு கிராம் ரூ. 99
21-12-2024- ஒரு கிராம் ரூ. 99
20-12-2024- ஒரு கிராம் ரூ. 98
19-12-2024- ஒரு கிராம் ரூ. 99
18-12-2024- ஒரு கிராம் ரூ. 100.

Kerala Lottery Result
Tops